விரைவில் உருவாகிறது மரகத நாணயம் பார்ட் 2 – இயக்குனர் அறிவிப்பு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:25 IST)
இயக்குனர் ஏ ஆர் கே சரவண் தனது ஹிட் படமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரிடம் இருந்து அடுத்த படத்துக்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது தனது முந்தைய படத்தின் பார்ட் 2 வையே எடுக்க உள்ளாராம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். கௌபாய் ஸ்டைலில் இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்