பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இதை செய்யும் கெளதமி!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (13:20 IST)
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் முண்ணனி கதாநாயகியாக நடித்தார் நடிகை கெளதமி. உலக நாயகன் கமலுடன் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர் தற்போது கமலை விட்டு பிரிந்துவிட்டார். இதையடுத்து தற்போது கெளதமி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 
பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் தனிப்பட்ட காரணங்களால் கெளதமி அந்த படத்தில்  இருந்து வெளியேறினார். குக்கு சுரேந்திரன் இயக்கி வரும் மலையாள படம் இ. த்ரில்லர் படமான இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு கடந்த 27ம் தேதி துவங்கியது. கெளதமி முன்னதாக  2003ம் ஆண்டு வெளியான வரும் வருன்னு வன்னு மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து  தற்போது மலையாள படத்தில் நடிக்கிறார்.
அடுத்த கட்டுரையில்