மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய துருவ் விக்ரம்…!

vinoth

சனி, 25 அக்டோபர் 2025 (09:57 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அவர் அழைத்தால் கதை கூட கேட்காமல் இந்தியாவில் உள்ள எந்த நட்சத்திரமும் வந்து அவர் இயக்கத்தில் நடிப்பார்கள். அப்படிப்பட்ட மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் கேலிகளையும் விமர்சனங்களையும் பெற்றது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த தோல்வியால் மணிரத்னம் ஒரு சிறு இடைவெளியை எடுத்துக் கொண்டு அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதிவந்தார்.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்த என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்து ஒரு காதல் கதையை இயக்க அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தில் தற்போது த்ருவ் விக்ரம் கதாநாயகனாகவும், ருக்மிணி வசந்த் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து துருவ் விக்ரம் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங்கை மணிரத்னம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்