இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் எந்தவொரு முன்னணி நடிகரின் படமும் ரிலீஸாகவில்லை. அதனால் இளம் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்கள் ரிலீஸாகின. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு டியூட், பைசன் மற்றும் டீசல் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின.
இதில் டீசல் பிளாக்பஸ்டர் ஹிட்டாகவும், பைசன் சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தன. ஆனால் டீசல் படம் இந்த இரண்டு படங்களுக்கு நடுவே காணாமல் போனது. ஒட்டுமொத்தமாக அந்த படம் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். அதுல்யா ரவிக் கதாநாயகியாக நடித்துள்ளார். SP பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி பகிர்ந்துள்ள சமூகவலைதளப் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில் “எமக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளையும் காட்சிகளையும் தேடிப் பிடித்து படம் பார்த்து எமை வரவேற்று வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.