மணிரத்னத்தின் அடுத்த படத்தில் த்ருவ் விக்ரம் &ருக்மிணி வசந்த்!

vinoth

புதன், 6 ஆகஸ்ட் 2025 (08:08 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடியை சந்தித்தது. இண்டியன் 2 படத்தை விட மிக மோசமான வசூல் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதற்கடுத்து மணிரத்னம் அடுத்த என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்து ஒரு காதல் கதையை இயக்க அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது த்ருவ் விக்ரம் கதாநாயகனாகவும், ருக்மிணி வசந்த் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்