தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.
ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மணிகண்டன் விரைவில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை மறுத்துள்ள மணிகண்டன் “அண்ணன் என்னை அடிக்கடி கூப்பிட்டு பேசுவார். அப்படி நாங்கள் சந்தித்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து இப்படி ஒரு தகவல் பரவி விட்டது. இப்போதைக்கும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடக்கவேயில்லை” எனக் கூறியுள்ளார்.