மணிரத்னம் இயக்கிவந்த காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மார்ச்சில் படம் திரைக்குவரும் என அறிவித்துள்ளனர்.
கார்த்தி, அதிதி ராவ் நடித்த இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் வைரமுத்து.
ஊட்டி, சென்னை காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்திய எல்லைப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஒரேயொரு பாடல் காட்சியை மட்டும் ஐரோப்பாவில் படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து, மார்ச்சில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.