தீபாவளி ரிலீஸ் திட்டம்; ட்ரெய்லர் எப்போ? – மாநாடு பரபரப்பு அப்டேட்!

ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (15:39 IST)
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியிடுவது குறித்து நாளை முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்