வெப் சீரிஸில் அறிமுகமாகும் மம்மூட்டி… மீண்டும் லிஜோ ஜோசுடன் கூட்டணி!

புதன், 5 ஜனவரி 2022 (09:22 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் மீண்டும் ஒரு படைப்புக்காக இணைய உள்ளனர். ஆனால் இந்த முறை படமாக இல்லாமல் வெப் சீரிஸாக அது உருவாக உள்ளதாம். விரைவில் தொடங்க உள்ள இந்த சீரிஸின் படப்பிடிப்பை அடுத்து நெட்பிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்