மிரட்டலான மேக்கிங்… ரசிகர்களைக் கவர்ந்த மம்மூட்டியின் பிரம்மயுகம் டீசர்!

vinoth

வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:51 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரம்மயுகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. நடுக்காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டிற்குள் செல்லும் சிலர் பயத்தில் நடுங்குவதும், மம்மூட்டி மிரட்டலான தோற்றத்தில் தோன்றுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்