துல்கர் சல்மானின் 25வது படம்

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (21:38 IST)
துல்கர் சல்மான் நடிக்கவந்த 6 வருடங்களில், அவருடைய 25வது படத்தை எட்டியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 2012ஆம் ஆண்டு வெளியான ‘செகண்ட் ஷோ’ மலையாளப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தமிழில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துல்கர், நடிக்கவந்த 6 வருடங்களில் 25வது படத்தை எட்டியுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படம், துல்கரின் 25வது படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தில் துல்கரின் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்