5 கோடி பட்ஜெட்டில் 50 கோடி வசூலித்த மலையாள திரைப்படம் ‘பிரேமலு’

vinoth

சனி, 24 பிப்ரவரி 2024 (12:18 IST)
தென்னிந்திய சினிமாத் துறைகளில் மிகவும் ஆரோக்யமாக உள்ள மாநிலமாக கேரளா விளங்குகிறது. அங்குதான் முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களூம் ஹிட்டாகின்றன. நல்ல கதையம்சத்தோடு பெரிய நடிகர்கள் இல்லாமல் வரும் படங்களும் ஹிட்டாகின்றன. அப்படி ஹிட்டாகும் படங்கள் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்படி வெளியாகி ஹிட்டித்துள்ள திரைப்படம்தான் பிரேமலு. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் சுமார் 5 கோடியில் உருவாக்கப்பட்டு 50 கோடி வரை ரூபாய் திரையரங்கு மூலமாகவே வசூலித்துள்ளது.

தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பிரமயுகம் போன்ற மம்மூட்டி படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் இன்னமும் திரையரங்கில் சக்கை போடு போட்டு வருகிறது. கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் மல்ட்டி ப்ளக்ஸ் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்