காஞ்சனா பேய் மாதிரியே இருக்கீங்க டோலி - மாளவிகாவின் ஓணம் போட்டோவை கலாய்க்கும் ரசிகர்கள்!

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:47 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் நேற்று ஓணம் கொண்டாடிவிட்டு நதிக்கரையில் நின்று போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிகப்பு புடவை காட்டி கலைந்த தலைமுடியை சீவாமல் அலங்கோலமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு காஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் லாரன்ஸ் பேய் போன்று இருப்பதாக கூறி கலாய்த்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்