எல்லை மீறி போகுற... இதோட நிப்பாட்டு எல்லாத்தையும் - எச்சரித்த ரசிகன்!

புதன், 30 செப்டம்பர் 2020 (14:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பீச்சில் நின்று கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் தன்னுடைய ஸ்டைலில் எப்படி கண்டித்துள்ளார் பாருங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்