பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டகிராமில் மலாய்கா அர்ஜூன் கபூருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய வேடிக்கையான, அற்புதமான அர்ஜூன் கபூருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். காதலும் மகிழ்ச்சியும் எப்போதும் என்று கூறி அர்ஜூன் கபூருக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்தியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உருத்தாகியுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்ககள் கூறுகிறது.