மாநாடு வெற்றிதான்… அதுக்குன்னு இவ்ளோ சம்பளமாக கேக்குறது சிம்பு?

வியாழன், 23 டிசம்பர் 2021 (09:52 IST)
மாநாடு இந்த ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்த படம்.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது.

இந்நிலையில் சிம்புவை வைத்து படம் தயாரிக்கலாம் என்ற முடிவில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் அவரை அணுகிய போது சம்பளமாக 25 கோடி கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். இத்தனைக்கும் அவர் மாநாடு படத்துக்கு வாங்கிய சம்பளம் 6 கோடிதானாம். அதைவிட நான்கு மடங்கு அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்