முதல் முறையாக இணைந்த இளையராஜா – யுவன்… மாமனிதன் இசை வெளியீடு எப்போது?

வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:42 IST)
மாமனிதன் படத்தின் இசை வெளியீடு பற்றி அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இதற்காகவே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தை தமிழகத்தில் வெளியிடும் ஆர் கே சுரேஷ் இதுபற்றிய ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் செண்டரில்’ வெளியாகும் என அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்