இளையராஜாவின் ஒரே மாணவன் நான்தான்… லிடியன் நாதஸ்வரம் பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:34 IST)
சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற 13 வயது சிறுவன், அசாத்திய திறமை கொண்டவர் .உலகில் சாதித்த பல இசையமைப்பாளர்களின் கஷ்டமான இசைக் கோர்வையான சிம்போனியை கூட இவர் மிக எளிதாக பியானோவில் வாசித்து உலக அரங்கில் தமிழனாக சாதித்துள்ளார்.

பல சுற்றுப் போட்டிகளை கொண்ட தி வேர்ல்ட் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு சென்ற லிடியன், தன் திறமையால் இறுதிப் போட்டியில் தன் இரு கைகளாலும் இரு பியானோக்களை அதிவேகத்தில் மீட்டி உலக அரங்கில் சாதித்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழனாக தமிழ்நாட்டுக்கும் லிடியன் பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரு. 7 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்து கொண்டு வென்ற லிடியனுக்கு உலகெங்கிலும் இருந்து பாரட்டுகள் குவிந்து வருகின்றன.

இவர் ஏ ஆர் ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தவர். இந்நிலையில் இப்போது அவர் இசைஞானி இளையராஜாவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இசைஞானியின் ஒரே மாணவன் நான் என பெருமிதமாக தெரிவித்துள்ளார். அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘அனைவருக்கும் வணக்கம். என்னுடைய இசை ஆசிரியரான இசைஞானி இளையராஜா என்னிடம் சொன்னார். அவருடைய முதலும் கடைசியுமான மாணவன் நான்தான் என்று. ஒவ்வொரு நாளும் அவர் அன்புடன் எனக்கு கற்றுக்கொடுக்கிறார். உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்