லவ் டுடே படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:26 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்