இன்று வெளியாகிறது பா ரஞ்சித் விக்ரம் படத்தின் டைட்டில்!
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:09 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவில் நடக்க உள்ளது.
இந்த படம் 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்த கதையைக் கொண்டு உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பூ பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் வெளியாகும் என அறிவிக்கபப்ட்டுள்லது.