LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

vinoth

சனி, 18 மே 2024 (07:25 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார். குறுகிய காலத்தில் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி படங்களை எடுப்பதுதான் அவரின் சக்ஸஸ் பார்முலா. அவர் படங்களான கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகியவற்றில் சில பாத்திரங்களை கிராஸ் ஓவர் செய்திருந்தார். இது LCU என அழைக்கப்பட்டு வருகிறது.

விக்ரம் படத்தில் வொர்க் அவுட் ஆன இந்த உத்தி லியோவில் வேலைக்காகவில்லை. சில வாய்ஸ் ஓவர்களையும், ஒரு சின்ன கதாபாத்திரத்தையும் விக்ரம் மற்றும் கைதி படத்தில் இருந்து லியோ படத்தில் இறக்கிவிட்டு இதுதான் LCU என ரசிகர்களை செமையாக ஏமாற்றிவிட்டார் லோகேஷ் என அங்கலாய்க்கப்பட்டது.

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் LCU என்பது ஒரு பிராண்ட் ஆகிவிட்ட நிலையில் அதை வைத்து ஒரு டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளனர் லோகேஷ் குழுவினர். இதில் நரேன், லோகேஷ், அனிருத் ஆகியோர் இடம்பெற்று பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸில் 3 கோடி ரூபாய்க்கு விற்று கல்லா கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை ஓடும் இந்த டாக்குமெண்டரி விரைவில் ரிலீஸ் ஆகும் என சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் இந்த டாக்குமெண்ட்ரிக்கு “LCU chapter 0: பிள்ளையார் சுழி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்