இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
நேரடி ஒளிபரப்பு ஒன்றுக்காக செல்லும் படக்குழு அங்கே பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. கடந்த வாரம் வெளியான இந்த சீரிஸுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றமான ரெஸ்பான்ஸே கிடைத்துள்ளதாம். மிகப்பெரிய பொருட்செலவில் வெங்கட்பிரபு உருவாக்கிய இந்த வெப் சீரிஸை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.