ரூ.10 ஆயிரம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பிய இயக்குனர் லிங்குசாமி!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:16 IST)
செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமி சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக இயக்குனர் லிங்குசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியானது 
 
ஆனால் இந்த தீர்ப்பில் 6 மாதம் சிறை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து இயக்குனர் லிங்குசாமி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த வழக்கை சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்ய இருப்பதாக லிங்குசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்