லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லையா?

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:21 IST)
தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடிதான் வரவா என்ற பாடல் வெளியாகி நல்ல ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடக்காது என சொல்லப்படுகிறது. மேலும் மலேசியா அல்லது துபாய் ஆகிய நாடுகளில் ஒன்றில் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாடு சென்றிருக்கும் விஜய் தமிழ்நாடு திரும்பியதும் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்