10 கோடி பார்வையாளர்களைக் கடந்த காவாலா பாடல்…!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:39 IST)
சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இதையடுத்து பலரும் காவாலா பாடலில் இடம்பெற்றிருந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவும் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் வைரல் ஹிட்டான இந்த பாடல் இப்போது யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்