''விஜய்யின் சொல்லுக்கிணங்க'' ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் டுவீட்

சனி, 5 ஆகஸ்ட் 2023 (18:32 IST)
விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக பிரிவாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கப்பட உள்ளதாகவும்,  இந்த புதிய வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்’’, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்ட ரீதியாக அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீது தவறு  நிரூபிக்கப்பட்டால், மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் பற்றி விஜய் மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,  சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று #தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.!’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,

#சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க @TVMIoffl அலுவலகத்தில் இன்று #தமிழ்நாடு மற்றும் #புதுச்சேரி சேர்ந்த #வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், மாவட்ட… pic.twitter.com/p7a35rWFYi

— Bussy Anand (@BussyAnand) August 5, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்