இன்று லியோ டிரைலர், நாளை அயலான் டிசர்.. சன் டிவி யூடியூபில் கொண்டாட்டம்..!

வியாழன், 5 அக்டோபர் 2023 (17:58 IST)
இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில்  விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. 
 
அதேபோல் நாளை வெளியாக இருக்கும் அயலான் படத்தின் டீசரும் அதே சன் டிவி யூடியூப் சேனலில் தான் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடித்துவ முடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இரவு 7.08 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே லியோ படத்தின் டிரைலரும் இன்று சன் டிவியின் யூடியூப்ல் தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சன் டிவி யூடியூப் சேனலை இன்றும் நாளையும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
யூட்யூபில் மட்டும் இன்றி சமூக வலைதளங்களிலும்  லியோ ட்ரெய்லர் மற்றும் அயலான் டீசர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்