’விமர்சகர்களுக்கு வாழ்த்துகள்’…. தி லெஜெண்ட் பட ஹீரோ சரவணன் பதில்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (11:15 IST)
சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி லெஜெண்ட்’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நேற்று வெளியானது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரைலர் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும் ஒரு புதுமுக நடிகருக்கு இவ்வளவு செலவு செய்து படம் எடுத்துள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணனிடம் உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது “அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார். முன்னதாக ரஜினி விஜய்யும்தான் சினிமாவில் தன்னுடைய ரோல்மாடல் என்று பதிலளித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்