மி டூ விவகாரம் தமிழ் சினிமாவில் முக்கிய விவாதப் பொருளாக மாறக் காரணமானவர்களில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒருவர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுசி கணேசன் தன்னை அவருடையக் காரில் வைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில் இப்போது லீனா மணிமேகலை தன்னுடைய முகநூல் பதிவில் எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சுசிகணேசன் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அமலா பால் ஆகியோர்களை மிரட்டினார். பின்னர் என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். பின்னர் என் பாஸ்போர்ட்டை முடக்கும்படி செய்தார். நான் படிக்கும் கனடியன் பல்கலைக்கழகத்துக்கு எழுதி என்னுடைய மாணவர் விசாவை முடக்க முயற்சி செய்தார். இப்போது என் புகார்கள் குறித்து செய்திகள் பதிவு செய்யும் பத்திரிக்கையாளர்களை அவதூறு செய்கிறார். நான் மிகவும் பாதுகாப்பின்மையை உணர்கிறேன். எனக்கு ஏதாவது ஆனால் அது அவரால்தான் இருக்கும் என்பதை நான் அறிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.