விஜய்சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:52 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாரான திரைப்படங்களில் ஒன்று ‘லாபம்’ என்பதும் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தை சமீபத்தில் மறைந்த எஸ்பி ஜனநாதன் என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நான்கு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த பாடலின் இறுதியில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் ஒரு சில காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘லாபம்’ படம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிப்பில் டி இமான் இசையில் ஜெகநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்