சிவகார்த்திகேயனின் குத்துப்பாட்டு

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:36 IST)
வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டு, விரைவில் வெளியாக இருக்கிறது.



 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ரிலீஸாகும் இந்தப் படத்தின் முதல் பாடல், வருகிற 28ஆம் தேதி ரிலீஸாகிறது. அந்தப் பாடல், செம குத்துப்பாட்டாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்