ரிலிஸ் தள்ளிப்போன அதர்வா திரைப்படம்… இயக்குனர் அறிவிப்பு!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (10:03 IST)
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இப்போது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ஆனால் இப்போது படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் குருதி ஆட்டம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவித்துள்ளார். அவரின் முகநூல் பதிவில் ‘ குருதி ஆட்டம் ரிலீஸ் டிசம்பர் 24 ஆம் தேதியில் இருந்து தள்ளிவைக்கப் பட்டுள்ளது. விரைவில் புது ரிலீஸ் தேதியை அறிவிப்போம். எங்கள் படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு எங்கள் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் படத்தை உங்களுக்குக் காட்ட முயற்சி செய்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்