தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். இயக்குநர் லிங்குசாமியின் உறவினரான மதி ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி ஹீரோயினாகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
‘தெகிடி’, ‘சேதுபதி’ படங்களால் பாராட்டப்பட்ட நிவாஸ் கே பிரசன்னா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், தாய்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. யானைகளுக்குப் பெயர்பெற்ற இடம் என்பதால், முக்கியமான காட்சிகளை அங்கு எடுத்து வருகின்றனர்.