சிவ நடிகரின் அடுத்த படத்துக்கு ரூ.80 கோடி பட்ஜெட்

சனி, 9 செப்டம்பர் 2017 (19:10 IST)
சிவ நடிகர் நடிக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட்டை, 80 கோடி ரூபாய்க்குத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.


 
 
மிக குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்துவரும் சிவ நடிகருக்கு, மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவர் தற்போது நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள படத்திற்கு, விளம்பரத்திற்கு என்றே ஒரு தொகை ஒதுக்கியுள்ளார்களாம். 
 
இதன்மூலம் அவருடைய மார்க்கெட்டை அஜித், விஜய் ரேஞ்சுக்கு உயர்த்தி, சம்பளத்தையும் அந்த அளவுக்கு உயர்த்தப் பார்க்கிறார்களாம். கடைசி மூன்று படங்களையும் சொந்த பேனரில் தயாரித்தவர்கள், அடுத்த படத்தை வெளி பேனரில் நடிக்கப் போகிறார்களாம். அந்தப் படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்