அருள்நிதி நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’

சனி, 9 செப்டம்பர் 2017 (11:32 IST)
கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்திற்கு, ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
வித்தியாசமான கதைகளாக தேடிப்பிடித்து நடித்துவரும் அருள்நிதி, கடைசியாக ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். ராதாமோகன் இயக்கிய இந்தப் படத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அவர் நடித்திருந்தார். தற்போது, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வருகிறார். மாறன் இயக்கும் இந்தப் படத்தில், மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்நிலையில், கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார் அருள்நிதி. ‘புகழேந்தி எனும் நான்’ என படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான்  இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்