ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

vinoth

புதன், 11 ஜூன் 2025 (09:49 IST)
தனுஷ் நடித்துள்ள அவரின் நேரடி இரண்டாவது தெலுங்குப் படமான குபேரா படத்தை சேகர் கமுலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங் படம் பற்றி பகிர்ந்துள்ள ஒரு தகவல் கவனம் பெற்றுள்ளது.

அதில் “இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக ஜூலை மாதம் ரிலீஸ் செய்யலாம் என ஓடிடி நிறுவனத்திடம் பேசினேன். ஆனால் அவர்கள் அறிவித்தபடி ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகவில்லை என்றால் பேசிய தொகையில் 10 கோடி ரூபாயைக் குறைத்துவிடுவோம் எனக் கூறினார்கள். ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் அதிகாரத்துக்கு வந்துவிட்டன” எனக் கூறியுள்ளார். குபேரா திரைபடத்தை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்