சாரி மோகன்லால்..உங்களை பற்றி தெரியாது - பின்வாங்கிய நடிகர்...

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (11:58 IST)
கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்லாலை பற்றி தவறாக விமர்சித்து வந்த பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


 

 
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் என்னும் கேஆர்கே டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வந்தார். மோகன்லாலின் ரசிகர்களையும் முட்டாள்கள் என அவர் விமர்சித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கமால் ஆர் கான் பதிவிட்ட டுவீட்டில் நடிகர் மோகன் லால் சுய இன்பம் செய்வது போன்று செய்கையில் ஈடுபடுகிறார், இதனை பார்த்து அருகில் உள்ள நடிகர் மம்முட்டி விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதனை பதிவேற்றிய கமால் ஆர் கான் என்னை திட்டுவதற்காக பொது நிகழ்ச்சியில் மோகன்லால் தனது கையால் என்ன செய்கிறார் என்பதை அவரது முட்டாள் ரசிகர்கள் விளக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


 

 
மேலும் மற்றொரு டுவீட்டில் பார்ப்பதற்கு சோட்டா பீம் போல இந்த காமெடியன் கிரேட் பீமரின் வேடத்தில் நடிப்பது அவருக்கு பெரிய அவமானம் என கூறியுள்ளார். இதனையடுத்து மோகன்லாலின் ரசிகர்கள் கமால் ஆர் கானை டுவிட்டரில் திட்டி தீர்த்தனர். 


 

 
இதனையடுத்து, தற்போது சரணடைந்த கமால் ஆர் கான் “ சோட்டாபீம் என உங்களை அழைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் மோகன்லால்..உங்களை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. தற்போதுதான், நீங்கள் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் எனத் தெரிந்து கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்