ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் க்ரீத்தி சனோன்!

vinoth

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (08:06 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.  2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த பட ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த ஷூட்டிங்கும் வாரணாசியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான க்ரீத்தி சனோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்