விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பாலா அறிமுகமானார். அதன் பிறகு, விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கோமாளியாக அவர் இடம் பெற்றதை அடுத்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள்.
அது மட்டும் இன்றி, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார் என்றும், அதனால் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷெரீஃப் இயக்க உள்ளார் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தான் தயாரிக்கும் படத்தில் பாலாவை அறிமுகம் செய்யலாம் என்று இருந்த சமயத்தில், நல்ல கதையுடன் ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார் எனவும், ராகவா லாரன்ஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.