தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

Mahendran

செவ்வாய், 18 மார்ச் 2025 (18:15 IST)
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பல அரசியல் தலைவர்களும் கட்சியின் தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இன்று தமிழகம் முழுவதும்  அன்னதான நிகழ்ச்சிகள் உட்பட பல சமூக சேவை நிகழ்ச்சிகளும் தேமுதிக தொண்டர்களால் நடைபெற்றது.
 
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரேமலதாவுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று விஜய் தெரிவித்ததாகவும், அதற்குப் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, 'கோட்' திரைப்படம் வெளியாகும் போது, விஜயகாந்தின் காட்சிகளை அனுமதிப்பதற்காக விஜய் நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அதேபோல், தற்போதும் அவர் பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக, இரு கட்சிகளும் நெருக்கமாகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்