இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கவுண்டமணி “என்ன பேசுவது என்று தெரியவில்லை. வந்திருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. வராத ரசிகர்களுக்கும் நன்றி. வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஒத்த ஓட்டு முத்தையா குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அதனால் எல்லோரும் இந்த படத்தைப் பார்த்து ஒத்த ஓட்டு முத்தையாவை – வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் இந்த படத்தை எல்லோரும் பார்க்கவேண்டும். அதை வெற்றிப்படமாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.” எனக் கூறியுள்ளார்.