கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து வன்கொடுமை! சிசிடிவியில் வெளியான ட்விஸ்ட்! - சீரியல் நடிகர் கைது!

Prasanth K

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (09:37 IST)

இந்தி சீரியல் நடிகர் ஆஷிஷ் கபூர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை வன்கொடுமை செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது,

 

இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ஆஷிஷ் கபூர். இவருக்கு டெல்லி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 24 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகியுள்ளது. சமீபத்தில் ஆஷிஷ் கபூர் தனது வீட்டில் ஒரு பார்ட்டி நடத்தியபோது அந்த இளம்பெண்ணுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அவ்வாறாக விருந்துக்கு சென்ற தன்னை ஆஷிஷ் கபூரும், அவரது நண்பரும் கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாக அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆஷிஷ் கபூரை கைது செய்தனர்.

 

பின்னர் இருவரும் தன்னை வன்கொடுமை செய்யவில்லை என்றும், ஆஷிஷ் கபூர் மட்டுமே வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் வாக்குமூலத்தை மாற்றினார். இளம்பெண் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில், போலீஸார் பார்ட்டி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது ஆஷிஷ் கபூரும் அந்த இளம்பெண்ணும் தனியாக பாத்ரூமுக்கு செல்வதும், நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் அங்குள்ளோர் கதவை தட்டுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அவர்கள் உள்ளேயிருந்து வந்த பிறகு ஆஷிஷ் கபூரின் மனைவி அந்த இளம்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆஷிஷ் கபூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்