முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

Siva

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (17:51 IST)
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'ஹார்ட் பீட்' இணைய தொடரின் இரண்டாம் பாகமான 'ஹார்ட் பீட் - 2' படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அதன் நிறைவு நாள் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
 
'டெலி ஃபேக்ட்ரி' நிறுவனம் தயாரிப்பில், தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில், கார்த்திக், அனுமோள், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  
 
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'ஹார்ட் பீட் - 2' தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இதன் மூலம் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
 
படப்பிடிப்பின் நிறைவு நாளில், படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி, தங்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். 
 
'ஹார்ட் பீட் - 2' இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பை நிறைவு செய்யவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப்பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் இதன் மூன்றாவது பாகம் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்