கே.ஜி.எஃப் ஹீரோவின் மாஸ் உதவி....குவியும் வாழ்த்து

வியாழன், 3 ஜூன் 2021 (17:14 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  சினிமா கலைஞர்களுக்கு  முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  கன்னட சினிமாக் கலைஞர்கள் 3000 பேர்  கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தலா ரூ.5000 நன்கொடை வழங்கவுள்ளதாக கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  தமிழ் சினிமாவில் வாழ்வாரம் இழந்துள்ள பெஃப்சி கலைஞர்களுக்கு  முன்னனி நடிகர், அஜித் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நிதியுதவி செய்த நிலையில்,  கன்னட நடிகர் யாஷ் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு சினிமா பிரபலஙக்ளும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கேஜிஎஃப் சேப்டம் 2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் எனதெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்