சிவகார்த்திகேயன் பட நடிகை தடுப்பூசி செலுத்தினார் !
செவ்வாய், 1 ஜூன் 2021 (20:39 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தடுப்பூசி செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.
எனவே, கனா, காக்காமுட்டை, சிவகார்த்தியேனுடன் நம்ம வீட்டுப் பிள்ளை கபெ.ரணசிங்கம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதுகுறுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.