சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியான கேஜிஎஃப் போஸ்டர்! – அதிர வைத்த அதீரா!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (10:43 IST)
இனு சஞ்சய் தத் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் கேஜிஎஃப் சாப்ட்டர் 2 வில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் பாகம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேஜிஎஃப் படத்தில் அதீரா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி படக்குழு அதீரா போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகியுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்