கேஜிஎப் 2 படத்தின் முன்பதிவு இன்று இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இன்று முதல் இந்தியாவில் இந்த படத்துக்கான முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.