கே.ஜி.எப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: பீஸ்ட் உடன் மோத முடிவு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:49 IST)
கே.ஜி.எப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: பீஸ்ட் உடன் மோத முடிவு!
பிரபல கன்னட நடிகர் யாஷி நடித்த கேஜிஎப் 2 என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய்யின் ’பீஸ்ட்’ படத்துடன் மோதுவது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’  திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்றைய தேதியில் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாது என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று யாஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து முடித்துள்ள ‘கே.ஜி.எப் 2’  படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ’பீஸ்ட்’ மற்றும் கே ஜி எஃப் 2 மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
‘கே.ஜி.எப் 2’  ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்