விஷ்ணு விஷால் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (17:01 IST)
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கதாநாயகன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.


 

 
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயகன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் முருகானந்தம். விஷ்ணு விஷாலே தயாரித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக கேத்ரினா நடித்துள்ளார். காமெடியனாக சூரி நடிக்க, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி. பிரச்னையால் பல படங்களின் ரிலீஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அவையெல்லாம் தீர்ந்தபிறகு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பு இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்