பத்மாவதி படம் ராணி ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பத்மாவதி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. மகாசபாவின் இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங் கூறியதாவது, தீபிகாவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக தீபிகாவின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு “தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி வழங்குவோம். அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவியையும் வழங்குவோம். தேவைப்பட்டால் பாஜகவிலிருந்தும் விலகுவேன்” என அறிவித்தேன். மேலும், பத்மாவதி படம் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி சுராஜ் பால் அமு தொடர்பாக வெளியான செய்தியை வெளியிட்டு, அதில், சூரஜ் பால் அமு, ஹெச்.ராஜாவையே கூஜாவாக்கி விட்டார். இவர் பாஜகவிற்கு கிடைத்த சொத்து” என கிண்டலடித்துள்ளார்.